பாகிஸ்தானில் வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் நான்கு சகோதரிகள் தற்கொலை

Written by vinni   // September 21, 2013   //

pakisபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.

இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர்.

இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை பொலிஸார் உயிருடன் மீட்டனர்.


Similar posts

Comments are closed.