ஜெனீவா மாநாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்: சிரியா

Written by vinni   // September 21, 2013   //

sriyaசிரியாவில் தற்போது நிலவும் உள்நாட்டுப் போர் நாட்டை சீர்குலைத்து வருவதால், ஜெனீவா மாநாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என்று சிரியா துணைப் பிரதமர் கத்ரி ஜமீல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“நீண்ட காலமாக தடைப்பட்டுள்ள ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில், அப்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.

வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்த்து, ஜனநாயக முறையில் அரசியல் தீர்வு காண துணை புரியும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும், இதுவே சிரியா அரசின் தற்போதைய நிலைப்பாடு’ என்று அவர் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.