சிறு குழுவினர் மட்டுமே மத கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.

Written by vinni   // September 21, 2013   //

manmohan‘‘நாட்டில் சிறிய குழுவினர் மட்டுமே மத கலவரங்களில் ஈடுபடுகின்றனர்’’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.தேசிய மத நல்லிணக்க விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த காம்லியனா, ஒடிசாவை சேர்ந்த முகமது அப்துல் பாரி ஆகியோருக்கு 2011ம் ஆண்டுக்கான மத நல்லிணக்க விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் பிரதமர் மன்மோ கன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது: முசாபர் நகரில் நடந்த மதக் கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. நாட்டில் பல நூற்றாண்டுகளாக பல தரப்பட்ட மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். நம்மிடையே உள்ள சிறிய அளவிலான குழுவினர் மட்டுமே மத கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.நாட்டின் சில பகுதிகளில் மத ரீதியான பதற்றம் நிலவி கொண்டிருக்கும் நிலையில், இந்த விழா நடக்கிறது. நமது சமூகத்தில் நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டியது தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்த முறையிலும் நமது கடமையாக இருக்கிறது. இதற்காக, டெல்லியில் வரும் 23ம் தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.இன்று விருது பெற்றுள்ள 2 பேரும் மத நல்லிணக்கத்துக்காக செய்துள்ள சிறப்பான சேவை, நம் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைக்கிறது. இவ்வாறு மன்மோகன் பேசினார்.


Similar posts

Comments are closed.