டெங்கு காய்ச்சல் 912 பேர் பாதிப்பு

Written by vinni   // September 21, 2013   //

dengu mosquitoடெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 912 ஆக உயர்ந்துள்ளது.டெல்லியில் பருவமழை முடிந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முடிய 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 131 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்சல் பரவல் அதிகரித்தது. கடந்த 14ம் தேதிவரை செப்டம்பரில் மட்டும் 304 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியுள்ளது. 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 912 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.


Similar posts

Comments are closed.