ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபாபா ராம்தேவ்

Written by vinni   // September 21, 2013   //

babaramdev_16சுவாமி விவேகானந்தரின் 120 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் பதஞ்சலி யோகபீட அமைப்பினரால் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கொண்டாடப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டிருந்தார்.

அழைப்பிற்கிணங்க நேற்று அவர் இந்தியாவிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தார். ஆயினும் சுங்க அதிகாரிகள் அவரை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காக்க வைத்தனர்.

வர்த்தக விசா அனுமதி பெறாமல் பார்வையாளர் அனுமதி பெற்றிருந்தது குறித்து விசாரிக்கப்பட்டது எனவும், அவர் கையில் கொண்டு சென்றிருந்த மருந்துகள் குறித்து கேட்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளிவந்தன. மருந்துகள் குறித்து கேட்டது ஆதாரமற்றது என்று கூறிய ராம்தேவின் தகவல் அதிகாரியான எஸ்.கே.டெஜரவாலா அவரை நிறுத்தி வைத்தது குறித்து அதிகாரிகள்தான் விளக்கம் தரவேண்டும் என்று கூறினார்.

தனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ராம்தேவ் கொண்டு சென்றிருந்தார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இறுதியில் சோதனைகள் முடிந்தபின் பாபா ராம்தேவ் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக லண்டன் நகருக்கு சென்றார்


Similar posts

Comments are closed.