அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன் பத்திரிகை வினியோகம்

Written by vinni   // September 21, 2013   //

elilans_wife_ananthiஅனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னளால் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது.

எனினும் அநந்தி அரசாங்கத்துடன் தான் இணையவில்லை எனவும் இது அரசாங்கத்தினதும் அவர்களின் படையினரதும் திட்டமிட்ட போக்கிலித் தனம் எனவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.