பெங்களூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது

Written by vinni   // September 21, 2013   //

arrest_CIபெங்களூர் அருகே நெலமங்களா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உன்னிகெரே கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் சுவேதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நெலமங்களாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வருகிறார். தும்கூர் மாவட்டம் மித்ரஹள்ளியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. நெலமங்களாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், சக்கரவர்த்திக்கும், சுவேதாவுக்கும் காதல் மலர்ந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். கடந்த 15–ந்தேதி மாகடியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிய சுவேதா, அதன்பிறகு திரும்பி வரவில்லை.

சுவேதாவின் பெற்றோர், அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்ட சுவேதா திடீரென்று வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது சக்கரவர்த்தி தன்னை கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக தனது பெற்றோரிடம் சுவேதா கூறினார்.

இதுபற்றி மாதநாயக்கனஹள்ளி போலீசில் சுவேதாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதில், தன்னுடைய மகள் சுவேதாவை தும்கூர் மற்றும் கேரள மாநிலத்திற்கு சக்கரவர்த்தி கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி சக்கரவர்த்தி கற்பழித்து விட்டதாக புகாரில் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரி மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நெலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Similar posts

Comments are closed.