தேர்தல் தொடர்பில் யாழ்., மன்னார் கத்தோலிக்க ஆயர்கள் வெளிநாட்டு தூதுவர்களிடம் வலியுறுத்தல்

Written by vinni   // September 21, 2013   //

rayappu-joseph-and-bishop-thomas-savundranayagamவடமாகாண சபைத் தேர்தலில் பாரிய வன்முறைகள் இதுவரை நடைபெறாவிட்டாலும் சிறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களைப் போல் தற்பொழுதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என வடபகுதி கத்தோலிக்க ஆயர்கள் நோர்வே மற்றும் கனேடிய தூதுவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுநன்மைக்காக செயற்படுவது அரசியலாகும். இதனை உணர்ந்து மற்றைய இடங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் அரசாங்கத்திற்கு முன்னுதாரணமாக வடக்கு மாகாண சபை செயற்படுவதற்கு தன்னலத்தை விட்டுவிட்டு பொதுநலத்திற்காக உழைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நோர்வே தூதுவர் லொக்ஸன் மற்றும் கனேடிய தூதரக அதிகாரிகள் யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.