உலகின் சிறந்த வானளாவிய கட்டிடமாக மர்லின் மன்றோ தெரிவு

Written by vinni   // September 21, 2013   //

mississisuga_building_002கடந்த 2012ம் ஆண்டின் மிகச்சிறந்த புதிய வானளாவிய கட்டிடம் என்ற கணிப்பீட்டில் மிசிசாகாவில் உள்ள “Marilyn Monroe” என்றழைக்கப்படும் ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவாகியுள்ளது.
Absolute World Towers என்ற இவ்விரு கட்டிடங்களும் வளைவான அமைப்புடையவை.

ஜேர்மனியின் ஹேம்பர்க் (Hamburg) நகரத்திலுள்ள கட்டிட கணிப்பீட்டு நிறுவனமான Emporis ஆண்டு தோறும் உலக நாடுகளில் மிகச்சிறந்த கட்டிடங்களை தெரிவு செய்து விருது வழங்கி வருகின்றது.

இதன்படி 2012ல் நடத்தப்பட்ட கணிப்பில் கனடாவின் மிசிசாகாவில் அமைந்துள்ள இரு கட்டிடங்களினதும் வளைவான அமைப்பிற்கு Emporis Skyscraper Award விருது கிடைத்துள்ளது.

கட்டிடங்களின் அமைப்புக்களும் ஒவ்வொரு தளத்திலும் 8 பாகையில் முறுக்கப்பட்டிருப்பது ஒரு சாதாரணமானதல்ல என்று கணிப்பீடு செய்த நடுவர்கள் கூறியுள்ளனர்.

இக்கட்டிடங்கள் Beijing கை அடிப்படையாக கொண்ட MAD கட்டிட கலை வல்லுநர்களாலும், Toronto- Burka Architects கட்டிட கலை வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டனவாகும்.

இரு கட்டிடங்களிலும் உள்ள தளங்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி ஆனவை இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

இரு கட்டிடங்களும் முறையே 176 மீற்றர், 158 மீற்றர் உயரமுடையவை. இரண்டாம் இடம் அபுதாபியிலுள்ள Al Bahr Towers ற்கும் 3ம் இடம் Burj Qatar என்ற கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள கட்டிடத்திற்கும் கிடைத்துள்ளன.


Similar posts

Comments are closed.