அனந்தி வீட்டின் மீதான தாக்குதலை படையினரே நடத்தினர்.

Written by vinni   // September 20, 2013   //

ananthiதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான திருமதி அனந்தியின் வீட்டிற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என்பதை தாக்குதலுக்குள்ளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த சம்பவத்தில் ஒரு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் விடயங்களில் இராணுவத்தினர் தலையீடுகள் அதிகமான உள்ளன. இராணுவம் எந்த விதத்திலும் தேர்தல் விடயங்களில் தலையிட முடியாது.

எந்த அச்சுறுத்தல் வந்தாலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றார்.


Similar posts

Comments are closed.