வடக்கில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மும்முரம்

Written by vinni   // September 20, 2013   //

INTER0125 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலானது உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பெரும் அவதானத்தை ஈர்த்துள்ளது. இதற்கமைய வட மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் பலரும் வட மாகாணத்தில் தங்களது கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், வவுனியாவில் நிலைகொண்டுள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் பலர், வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி எடுத்துச் செல்வதை கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட தேர்தல் பொறுப்பதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர, ‘சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இரண்டு வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக’ கூறினார்.

இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட சார்க் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு குழுவும் பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு குழுவும் வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Similar posts

Comments are closed.