இலங்கையில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஐ.நாவுக்கு அறிக்கை

Written by vinni   // September 20, 2013   //

rapeஇலங்கையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையான 5 வருட காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்க நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்கான அறிவிப்பு பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Similar posts

Comments are closed.