நடிகர் விவேக் ஒபராய் மீது நடவடிக்கை!

Written by vinni   // September 20, 2013   //

vivek_obrai_002பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், தான் நடிக்கும் படங்களுக்கு வரி செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார்.
விவேக் ஓபராய் தான் நடிக்கும் எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் அதன் தயாரிப்பாளரிடமிருந்து சேவை வரியை பெறுவது வழக்கம்.

ஆனால், ஒருபோதும் அதை சேவை வரித்துறையினரிடம் அவர் செலுத்தியது கிடையாது என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேவை வரித்துறையினரிடம் தனது பெயரைக்கூட பதிவு செய்யாமல் இழுத்தடித்தார் என்று சேவை வரித்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுமார் 50 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் விவேக் ஓபராய் நழுவி வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களாக அவரது நடவடிக்கைகளை கவனித்து வந்தும், அவர் தனது திட்டங்கள் குறித்த விவரங்களை ஒப்படைக்காமல் அவர் இருந்து வருகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதை அடுத்து நேற்று முன் தினம் எங்கள் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்துள்ளார் என்று கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.