செல்சியா அணிக்கு அதிர்ச்சி அளித்த பார்சிலோனா

Written by vinni   // September 20, 2013   //

footஐரோப்பிய நாடுகளின் இந்த வருடத்துக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், நேற்று நடந்த லீக் போட்டிகளில் ஒன்றில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், முன்னாள் ஐரோப்பிய சாம்பியன்களான அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியினரும் மோதினர்.

இதில் பார்காவின் நட்சத்திர வீரரான லயோனில் மெஸ்ஸி அடித்த மூன்று கோல்கள் பார்சிலோனா அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற உதவியது.

இதன்மூலம் மெஸ்ஸி இதுவரை சாம்பியன்ஷிப் போட்டிகளில் எடுத்துள்ள கோல்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. அதேபோல் நான்கு சாம்பியன்ஷிப் லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று கோல்கள் போட்ட வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். மேலும், பார்சிலோனா அணிக்காக 24 ஆவது முறையாக கோல்கள் போட்ட பெருமையும் மெஸ்ஸிக்கே கிடைத்தது.

முதல் நாள் கலடாசரேயுடன் விளையாடிய ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த மூன்று கோல்கள் அந்த அணியினரின் 6-1 என்ற வெற்றிக்கு வழி வகுத்தது எனினும், மெஸ்ஸியின் ஆட்டம் விளையாட்டின் மீது அவருக்கிருந்த ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியது. அவரது முனைப்பான ஆட்டமே பார்சிலோனா அணியினருக்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளது.

நேற்று நடந்த மற்றொரு லீக் போட்டியில் சொந்த மண்ணில் ஜோஸ் மரின்ஹோவின் தலைமையில் விளையாடிய செல்சியா அணி அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. ஈ பிரிவில் அவர்களுடன் மோதிய எப்சி பேசல் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Similar posts

Comments are closed.