காமக்கொடூரன் ஜெய்சங்கருக்கு உதவியது யார்? வெளிவரப்போகும் உண்மைகள்

Written by vinni   // September 20, 2013   //

jaishankar_1பெங்களூர் சிறையிலிருந்து தப்பியோடிய ஜெய்சங்கருக்கு அவர் தப்பிக்க உதவியது யார்? என்பது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது.
கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், ஆந்திர மாநிலங்களில் தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்து வந்தவன் சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கர்.

தமிழகத்தை தவிர கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இவர் மீது 20க்கும் மேற்பட்ட பலாத்கார, கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.

போதையில் சுற்றி திரியும் இவன், பொலிஸ் அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி சாமர்த்தியமாக தப்பி செல்லும் முறையை கற்று வைத்திருந்தான்.

இந்நிலையில் கடந்த 1ம் திகதி அதிகாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவமனையில் இருந்து 3 சுவர்களை ஏறி குதித்து இவன் தப்பினான். வலைவீசி தேடப்பட்ட இவனை 7ம் திகதி பெங்களூரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அப்போது ஜெய்சங்கர் தாடியை சேவ் செய்து கொண்டு கலர் சட்டையுடன் இருந்துள்ளான். இந்த ரகசிய தகவல், பொலிசார் வெளியிட்ட புகைப்படம் மூலம் தெரியவந்தது.

ஏனென்றால் ஜெய்சங்கர் சிறையில் இருந்தபோது தாடியுடன் இருந்துள்ளான். இதனால் பொலிசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. கைதான அடுத்தநாள் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையிலிருந்து தப்பியது எப்படி? தப்பி செல்லும்போது சிறைக் கதவை திறப்பதற்கு உதவியவர்கள் யார். சிறையினுள் அவருக்கு இருந்த செல்வாக்கு குறித்த தகவல் வெளியானது.

இதனால் வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலருக்கு கை, கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

விரைவில் இதுகுறித்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் எப்படி தப்பி சென்றார், யார் யார் உதவினர், கள்ளசாவி எப்படி வந்தது, தாடியை எப்படி ஷேவ் செய்தார், கூட்லு கேட் பகுதிக்கு எப்படி சென்றார் என பல்வேறு விளக்கங்களுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.