சுவாசக்குழாயில் இட்லி சிக்கி முதியவர் மரணம்

Written by vinni   // September 20, 2013   //

dead_body_கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் திருவேணி நகரை சேர்ந்தவர் குச்சு (வயது 63).
இந்த பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி திருவோணத்திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது.

இந்த விளையாட்டு போட்டிகளில் இட்லி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இதில் குச்சு உள்பட 10–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டி ஆரம்பித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் வேகமாக இட்லிகளை சாப்பிடத் தொடங்கினர்.

அப்போது எதிர்பாராத விதமாக குச்சு சாப்பிட்ட இட்லி ஒன்று அவரது தொண்டையில் உள்ள சுவாசக்குழாயில் சிக்கியது. இதனால் அவர் மூச்சு விடமுடியாமல் திணறினார். சற்று நேரத்தில் மயக்கமடைந்து கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை குன்னங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சுவாசக்குழாயில் சிக்கிய இட்லியை அகற்ற முடியவில்லை. இதனால் குச்சு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Similar posts

Comments are closed.