அரச வானொலி தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களை இன்றும் ஒலிபரப்புகிறது

Written by vinni   // September 20, 2013   //

srilanka-singamயாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்திலிருந்து ஒலிபரப்பாகும் அரச வானொலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நள்ளிரவுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆனாலும் யாழ் அரச வானொலி பிரசாரத்தை தொடர்கிறது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்தின் நேரடி வர்ணனை குறித்த வானொலியில் ஒலிபரப்பட்டது. அந்த வர்ணணையின் இடையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழர்களின் கடவுள் சிலைகள்மீது தாக்குதல் நடத்துபவர்கள் ஆன்மீக ஒலிபரப்பில்கூட தமது அரசியல் நடவடிக்கைகளை திணிப்பதாக தெல்லிப்பளை அம்மன் ஆலய பக்தர் ஒருவர் விசனம் தெரிவித்தார்.
இன்றும் நிகழ்ச்சிகளிலும் பத்திரிகைப் பார்வை போன்ற தொனிகளிலும் தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான, சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தேர்தல் விதியை மீறும் செயல் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேயர்கள் என்ற போர்வையிலும் சிலர் கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரங்களை குறித்த வானொலியில் மேற்கொண்டுள்ளனர்.
யாழ் அரச வானொலி யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவினால் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.