இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவினை எதிர்கொள்வோம் !வாருங்கள் கனேடிய தமிழ் உறவுகளே !

Written by vinni   // September 20, 2013   //

US_Rally_Ponguthamil1சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகையினை எதிர்கொள்ள கனேடியத் தமிழ் உறவுகளை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்அறைகூவல் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க் செல்லவிருக்கின்றார்.

இந்நிலையில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாசபையின் முன்னால் அணிதிரள்வதற்கு எழுச்சிக்கோலம்பூண்டுமாறு கனேடியத் தழிழ் உறவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அன்புரிமையோடு வேண்டியுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நியூ யோர் சிற்றியில் உள்ள ஐ.நா மையத்துக்கு முன்னர் இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கனடாவில் இருந்து இதற்கான பயண ஓழுங்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 23ம் திகதி இரவு 8 மணிக்கு நியூ யோர்க் நோக்கி வாகனங்கள் புறப்படவுள்ளன.

இரா சி டி (Brimley & Eglinton, Scarborough) சன் சிட்டி சூப்பர் மார்க்கெட் (Scarborough) நந்தா கேட்டரிங் (Scarborough) , உதயாஸ் (Mississauga ), கொலம்பியா வீடியோ(Brampton), வியயாஸ் சில்க் (Mississauga), ப்ரியாஸ்(Markham) ஆகிய இடங்களில் பயணங்களுக்கான சிட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பிலான மேலதிக விபரங்களை குறித்த 416-854-4143, 647-209-4100 , 647-765-4655 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அம்பலப்படுத்துவதோடு தமிழர்களுக்கான நீதியினை அனைத்துலகின் முன் பொங்குதமிழென முழங்குவோம் வாரீர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைக்கின்றது.


Similar posts

Comments are closed.