அனந்தி எழிலன் சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலிலிருந்து மீண்டும் மயிரிழையில் உயிர்தப்பினார்

Written by vinni   // September 20, 2013   //

elilan-wife-ananthiதமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறைப்பொறுப்பாள் எழிலனின் மனைவியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான அனந்தி எழிலன் மீண்டுமொரு தடவை மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு அனந்தி எழிலனின் வீட்டுக்குள் உட்புகுந்த 25க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் அதிரடி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதோடு அனந்தி எழிலனை இலக்கு வைத்துள்ளனர்.

அனந்தி எழிலன் மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில் ,சிறிலங்கா இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைக்குள் அகப்பட்டு 5 பேர் படுகாயமமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி இல்லை என்பதனையே இச்சம்பவம் மீண்டும் உணர்த்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழர்கள் மீது சிங்கள அரச கட்டமைப்பு தொடர்சியாக கட்டவிழ்த்து விட்டுள்ள இச்செயல்களை கவனத்தில் கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பதோடு , மீண்டுமொரு தடவை உயிர்தப்பியுள்ள அனந்தி எழிலன் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளது.


Similar posts

Comments are closed.