பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை: இந்தியா

Written by vinni   // September 19, 2013   //

indiaஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் எந்த மட்டத்தில் பங்கெடுப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என இந்தியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய நேரத்தில் இந்திய முடிவை எடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருடீன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நிச்சயமாக உரிய முடிவுவை இந்தியா எடுக்கும். ஏற்பாட்டாளர்கள் உட்பட சகல விடயங்களையும் பிரதிபலிப்பதாக அது அமையும். உரிய தருணத்தில் இது பற்றி அறிவிக்கப்படும். எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்தியா அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


Similar posts

Comments are closed.