தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களிக்கக் கூடாது இராணுவத்தினர் மிரட்டல்

Written by vinni   // September 19, 2013   //

armyதமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களிக்கக் கூடாது என யாழ். தென்மராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று இலங்கை இராணுவத்தினர் மிரட்டி வருகின்றனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று காலை சீருடையிலும் சிவில் உடையிலும் செல்லும் இராணுவத்தினர் கூட்டமைப்பிற்கு வாக்களிக்ககை் கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர்.

அத்தோடு தமது ஆதரவாளர்களாக உள்ள வேட்பாளர்களுக்கு வெற்றிலைக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மௌனமாக உள்ளனர் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Similar posts

Comments are closed.