குறுஞ்செய்தி மூலம் தேர்தல் பிரசாரம்

Written by vinni   // September 19, 2013   //

smsஎதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவர்களுக்கு குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) மூலமாக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தான் போட்டியிடும் கட்சி, சின்னம் மற்றும் விருப்பு இலக்கங்களை குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பியே பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவித்தலின் பிரகாரம் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கை 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்


Similar posts

Comments are closed.