சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது கிளர்ச்சியாளர்களே: ரஷ்யா

Written by vinni   // September 19, 2013   //

mideast-syria.jpeg20-1280x960சிரிய கிளர்ச்சியாளர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமைக்கான புதிய ஆதாரங்களை அந்த நாடு தம்மிடம் சமர்ப்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நாவின் அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டதும, பக்கச்சார்பானதும் ஒரு தலைப்பட்சமானது எனவும் ரஷ்ய பிரதி வெளிவிகார அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கூட்டா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தே ஐ.நா கண்காணிப்பாளர்கள் விசாரணை செய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் நடத்தப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து அவர்கள் விசாரணை செய்யவில்லை எனவும் ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சரின் என்ற இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை ஐ.நா விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
எனினும் இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை எதனையும் ஐ.நா விசாரணையாளர்கள் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த தாக்குதலை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரச படையினரே மேற்கொண்டதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் ரஷ்யா, சிரிய கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிவருகின்றது.

 


Similar posts

Comments are closed.