ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 7ஆவது தளத்தில் தீ பரவல் ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

சென் கிளையர்ஸ் அவனியூவிற்கு தெற்கே வாடன் அவனியூவின் ஃபெயர்வெலி கோர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது தளத்திலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

அந்த கட்டத்தின் கிழக்காக உள்ள பக்கத்தில் தீ பரவல் ஏற்பட்டதாக ஞாயிறு இரவு 9.22மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாகவே தீயணைப்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட அவர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.