வட மாகாணசபையில் நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய இன்று அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், வட மாகாண சபையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.