கொழும்பு நகரில் பல இடங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பு நகரில் பல இடங்களில் குப்பைகள் சேர்ந்துள்ளதால், ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை புறக்கோட்டை பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

போதிராஜா மாவத்தை மற்றும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை பிரதமர் பார்வையிட்டுள்ளார்.

குப்பைகள் கொட்டப்படும் இடங்களை முறையாகவும் அருகில் சுற்றுச்சூலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே. அனுர ஆகியோரும் பிரதமருடன் சென்றிருந்தனர்.