முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன கைச்சாத்திடவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே, அவர் கைச்சாத்திடவில்லை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவிய போது, சில குற்றச்சாட்டு உள்ளவர்களை நீக்குவது குறித்து நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் கூறப்படும் இந்த விடயங்களுக்காக விக்னேஸ்வரன் நீக்கப்பட கூடாதென்றே நாங்கள் நம்புகின்றோம்.

இதற்கு முன்னர் வடமாகாண சபையினால், நாட்டின் சமாதானம், ஒற்றுமை மற்றும் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன மாத்திரமே அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.