எற்ரோபிக்கோ பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் 10வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மார்ட்டின் க்ரோவ் வீதி மற்றும் சில்வர்ஸ்ரோன் டிரைவ் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சிறுவன் வீதியில் ஒடிய வேளையில், மார்ட்டின் க்ரோவ் வீதியில் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரால் அவர் மோதப்படடதாக போக்குவரத்துக் காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், எனினும் அவர் உயிராபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இதேவேளை விபத்தை அடுத்து அந்த வீதிப் பகுதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு காவல்த்துறையினரின் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த காரின் சாரதியும் சம்பவ இடத்தில் தரித்து நின்று காவல்த்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.