இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் இந்த நாடாளுமன்றில் இருக்கின்றார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இரட்டைக் குடியுரிமையின் அடிப்படையில் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிட்டால் அதே சட்டத்தின் கீழ் மேலும் சிலரும் உறுப்புரிமையை இழக்க நேரிடலாம்.

இரட்டைக் குடியுரிமையை கொண்டிருப்பதனால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் கீதா குமாரசிங்க மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும்.

அந்த மனுவின் மூலமும் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டால், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் வேறும் சிலரும் பதவிகளை இழக்க நேரிடும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.