அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதேபிரதமர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் சிறப்பு இராணுவம் அமைப்பதற்கு தற்போது எந்த தேவையும் இல்லை. கடந்தஅமைச்சரவையின் போது குப்பை பிரச்சினை தொடர்பிலேயேகலந்துரையாடப்பட்டது. பொன்சேகாவைபற்றியல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும்அமைச்சரவையில் பேசப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும்வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது மக்களுக்கானஅத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கியசெயலணியைநிறுவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.