தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணி விவகாரம் குறித்து இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 30ஆம் திகதி வடக்கு முதலமைச்சர், வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குரல் அமைப்பின் 8 மாவட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியைச் சந்திக்க அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.