டொன் வெலி பார்க்வேயில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தின்போது ஒருவர் வாகனத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், வாகனத்தை வெட்டி அவரை வெளியில் கொண்டு வந்ததாக அவசர மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

டொன் வெலி பார்க்வேயின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், பே வியூ மற்றும் பூலர் வீதித் தொடுப்பு பகுதியில் இன்று அதிகாலை 5.45 அளவில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விதிமுறைகளுக்கு மாறாக வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்களுள் இந்த நபரும் அடங்குவதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக குறித்த அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் காவல்த்துறையினரின் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.