கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் மனைவிமார் மற்றும் பெற்றோர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

சாட்சியங்கள் இன்றி தமது கணவன்மாரும், பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தாய் நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவும் கலந்து கொண்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம், மாணவர்கள் கடத்திச் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.