மாதம்பிட்டி குப்பை மேட்டை அரசுடமையாக்கி, அதனை பலாத்காரமாக கோத்தபாய ராஜபக்ஷவே மீதொட்டமுல்லைக்கு கொண்டு சென்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் கோத்தபாயவுக்கு தேவையான முறையில், பிரதம நீதியரசராக இருந்த சரத் என்ற சில்வா இரண்டு ஏக்கர் பகுதியில் குப்பைகளை கொட்டுமாறு உத்தரவிட்டதுடன் எதிர்ப்பவர்களை கைது செய்யுமாறும் தெரிவித்தார் என்றும் அவர் கூறினார்.