எதிர்வரும் இருவாரங்களுக்குள் அரச நிறுவனங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் மேலும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.