கனடாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் முன்னேற்றம் காணும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் கனேடிய மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டடுள்ள பொருளியல் வளர்சி எதிர்வுகூறல்களின் அளவிற்கு அந்த வளர்ச்சி காணப்பட மாட்டாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தியம் ஏற்கனவே எதிர்வு கூறியது போன்று கனடாவின் இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.9 சதவீதத்தினால் அதிகரிக்கப்படக்கூடும் என்பதனை அது மீளவும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கனடாவின் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது 2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கனேடிய மத்திய வங்கி, இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக இருகு்கும் என்று எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

இது முன்னதாக அது வெளியிட்டிருந்த 2.1 சதவீதப் பொருளாதார வளர்ச்சி என்ற எதிர்பார்ப்பை விட இது கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அடுத்த ஆண்டு கனடாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், அது 1.9சதவீமானதாகவே இருக்கும் என்றும் கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.