எனது அரசியல் குரு தோழர் சண்முகதாஸன் ஆவார். அவரது பாசறைக்குள்ளேயே அவருக்கெதிராக கேள்வி கேட்டு கட்சியை விட்டு வெளியேறியவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். லெனின், கார்ல் மாக்ஸ், மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தல மாநாட்டு அறையில் இன்றும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.