இலங்கையில் தொடர்ந்தும் கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல் அதிகரித்திருப்பதாக சர்வதேச மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில்,

இலங்கையில் சித்திரவதைகளை முற்றாக நீக்குவதற்கு மிகப்பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜோன் மெண்டிஸ் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

எனினும் சித்திரவதைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறும் சித்திரவதைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முழுமூச்சோடு செயற்படவேண்டும். இது தொடர்பில் ஜோன் மெண்டிஸ் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை இலங்கை அரசாங்கம் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சூக்கா கேட்டுக்கொண்டிருக்கிறார்.