ரொரன்ரோ நகர சபை குடியிருப்பு சொத்து வரியை இரண்டு சதவீதத்தினால் அதிகரிக்க உள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் இந்த சொத்து வரி தொடர்பில் விவாதங்கள் நடாத்தப்பட்டன.

பின்னர் கூட்டத்தின் நிறைவில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் நகர பிதா யோன் ரொரியால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 35வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்க்பபட்ட நிலையில், குடியிருப்பு சொத்து வரியை இரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பதை நகர சபை உறுதிசெய்துள்ளது.

அதேவேளை சொத்து வரியை 4.26சதவீதத்தால் அதிகரிப்பதற்கு Gord Perks ஆல் முன்வைக்க்பபட்ட மற்றொரு தீர்மானத்திற்கு எதிராக 32வாக்குகளும் ஆதரவாக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் வரிவிதிப்பை நிலையானதாக மாற்றுவதான மற்றுமொரு தீர்மானத்தையும் எதிர்த்து 40 வாக்குகளும், ஆதரவாக 2 வாக்குளும் அளிக்கப்பட்ட நிலையில அந்த தீர்மானமும் தோற்கடிக்க்பபட்டுள்ளது.

இதேவேளை நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த இரண்டு சதவீத வரி அதிகரிப்பு காரணமாக, சராசரி குடியிருப்பாளர்கள் வரியாக ஆண்டுக்கு சுமார் 96 டொலர்களை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.