ரொரன்ரோ வெஸ்ரேன் மருத்துவமனையில் இருந்து 1.2மில்லியன் டொலர்கள் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

களவாடப்பட்ட அந்த பொருட்களுள் gastroscopes மற்றும் colonoscopes என்பனவும் அடங்குவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் அளவில் மருத்துவமனையின் நான்காவது தளத்திற்கு சென்ற மூன்று நபர்கள் சத்திரசிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுளைந்ததாக விசாரணையாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பெருமதியான சத்திரசிகிச்சை உபரகணங்கள் களவாடப்பட்டு வெள்ளி நிற சிற்றூர்தி ஒன்றில் அவை ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படடுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைத் தேடி வருவதாக கூறியுள்ள காவல்த்துறையினர், அவர்களின் அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஒருவர் 35இற்கும் 45இற்கும் இடைப்பட்ட வயது மதிக்கத் தக்கவர் என்றும், 6அடி உயரமும், நடுத்தர உடல்வாகும் கொண்டிருந்தார் என்றும், அவ்வாறே மற்றையவர் 5அடி 8அங்குல உயரம், பருமனான உடலும், குட்டையான கறுப்புநிற முடியைக் கொண்டிருந்தார் என்றும், மூன்றாவது நபரும் 5அடி 8அங்குல உயரம், நடுத்தர உடல்வாக்குடையவராக காணப்பட்டார் என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த மூன்று சந்தேக நபர்களும் சவரம் செய்திருந்த முகத்துடன் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் கண்காணிப்புப் கருவியில் பதிவான நிழல்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.