பிரம்டனில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமி ஒருவர் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

டிக்சி வீதி மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில், Madison Streetஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில் பீல் பிராந்திய காவல்த்துறையினர் வெளியிட்ட தகவலில், அவசர மீட்புப் படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது குறித்த மூவரும் படுக்கை அறையினுள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமி தீக்காயங்களுடன் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்டு உடனடியாகவே மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த தீயணைப்பு பணிகளுக்காக 5 தீயணைப்பு வாகனங்களும் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், சுமார் 10 நிமிடங்களிலேயே தீயைக் கட்டு்பபாட்டினுள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.